காதலர் தினத்தன்று வெளியாக வேண்டிய ‘பாகுபலி 2’ படத்தின் டிரெய்லருக்குப் பதிலாக அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு ‘பாகுபலி’ படக்குழுவினர் போஸ்டர் மேல் போஸ்டராக வெளியிட்டு வருகின்றனர்.
‘பாகுபலி’ படத்துக்கு புக் செய்யப்பட்ட அனுஷ்கா அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்துக்காக எடையை அதிகரித்து நடித்தார். இதனால் ராஜாமௌலிக்கும் அனுஷ்காவுக்கும் சின்ன பிரச்சினை என்று கூட செய்திகள் வெளிவந்தது. உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா, ‘பாகுபலி 2’ படத்துக்கு ஏற்றபடி எடையை குறைக்க முடியவில்லை. எனினும் படப்பிடிப்பை முடிக்கவேண்டிய காரணத்தால் அவரை அதே எடையுடன் நடிக்க வைத்துள்ளனர். அனுஷ்கா இடம்பெற்றுள்ள காட்சிகளில் VFX வேலைகள் அதிகம் இருப்பதால் தான் இதன் டிரெய்லர் வெளியீடுக்கு காலதாமதம் என்று கூறப்படுகிறது.