மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிக்கு பாலியல் தொல்லை!

சீனியர் மாணவிகள் ஜூனியர் மாணவிக்கு பாலியல் தொல்லை!

பள்ளி, பணியிடங்கள், பயணங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. தொடரும் வன்முறைகள் குழந்தைகள், பெண்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடைபெற்று வருகின்றன.

ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து குற்றச் சம்பவங்களே ஊடகங்களில் வெளிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாளொன்றுக்கு கணக்கற்று பெண்களுக்கு எதிராக பாலியல்ரீதியான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன.

தலைநகர் டில்லி மோதி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவரும் 7 வயதுச் சிறுமியை, கடந்த 4 மாதங்களாக சீனியர் மாணவிகள் இருவர் பாலியல் தொல்லை செய்து வந்துள்ளனர். அதே பள்ளியில் 8 மற்றும் 9ஆம் வகுப்பில் படிக்கும் அந்த சீனியர் மாணவிகள் சிறுமியை காலி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவிகளும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு வயது 19. இவர், பலமுறை வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, சிறுமியின் தந்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டறிந்ததாக கூடுதல் ஆணையர் தீபேந்திர பதாக், சிறுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஆபாசமாக நடந்துகொள்ள மறுத்ததால் அடிப்பதாகக் கூறி மிரட்டியுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் கூறியுள்ளார்கள். இதுபோன்று அந்தப் பள்ளியில் வேறு எந்த மாணவிகளுக்கும் ஏற்படுகிறதா? என்பது குறித்து அறிய சிறப்பு முகாம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon