மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

லா லா லேண்ட்: கௌரவமும் குளறுபடியும்

லா லா லேண்ட்: கௌரவமும் குளறுபடியும்

ஆஸ்கர் விருதுகளுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பரிந்துரை செய்யப்படுவதே கௌரவமாக கருதப்படும். ஆனால் ‘லா லா லேண்ட்’ திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு 6 ஆஸ்கர் விருதினையும் வென்றுள்ளது.அதிகமான ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் லா லா லேண்ட் திரைப்படத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, லண்டனில் தங்கச் சிலை நிறுவப்பட்டது. ‘லா லா லேண்ட்’ திரைப்படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை சுமார் 8 அடி உயரத்தில், படத்தின் முக்கியக் காட்சியை சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 கிலோ தங்கத்தைக் கொண்டு, 360 மணி நேரம் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி முடியும்வரை இ‌ந்தச் சிலை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தத் திரைப்படம் அந்த சிலைக்கு கௌரவத்தை அளித்திருக்கிறது.

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க நடிகர், இயக்குநர் வாரன் பீடி மேடைக்கு வந்தார். முதலில் அவரிடம் தந்த உறையில் எம்மா ஸ்டோன் - லா லா லேண்ட் என்ற பெயர் இருந்ததால், சிறந்த படம் லா லா லேண்ட் என அவர் அறிவித்தார். படக்குழுவைச் சேர்ந்தவர்களும் மேடைக்கு வந்து விருதுகளைப் பெற்றனர். பிறகு நடுவர் குழுவைச் சேர்ந்த இருவர் மேடைக்கு வந்து நடந்த குளறுபடியை கூறினார்கள். சிறந்த படத்துக்கான உரிய உறையை வாங்கி, மூன்லைட் விருது பெற்றதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விழாவில் இப்படியான குளறுபடி நடப்பது இதுவே முதல் முறையாகும்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon