மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம்!

சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம்!

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நிலத்தடி நீரை உறிஞ்சி, விவசாய நிலங்களை நாசம் செய்யும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முதலில் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் நீர்நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மரங்கள் அகற்றப்படுவது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில், மரங்களை அகற்ற உத்தரவிட்டபிறகு 15% சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், ஒருசில மாவட்ட ஆட்சியர்கள் கருவேல மரங்களை அகற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon