பொதுத்துறையைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி.-ன் மின் உற்பத்தி நிறுவுதிறன் 48,000 மெகா வாட்டைத் தாண்டியுள்ளது.
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 24 சதவிகித பங்களிப்பை வழங்கி நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது என்.டி.பி.சி. இந்நிறுவனம் அனல் மின் உற்பத்தியை பிரதான உற்பத்தியாகக் கொண்டிருந்த போதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியும் செய்து வருகிறது. இதன் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் தற்போது 48,143 மெகா வாட்டை எட்டியுள்ளது. 2032ஆம் ஆண்டுக்குள் 1,30,000 மெகா வாட் திறனுடன் உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிபொருள் சக்தியின் பங்கினை 30 சதவிகிதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் தற்போது நிலக்கரியை எரிபொருளாக கொண்டு செயல்படும் 19 அனல் மின் நிலையங்களை கொண்டுள்ளது. அதேபோல எரிவாயுவில் இயங்கும் 7 மின் திட்டங்களும், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் 10 மின் நிலையங்களும் இருக்கின்றன. மேலும் நீர்மின் உற்பத்தி நிறுவனம் ஒன்றும் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் சூரிய சக்தி மின் உற்பத்தித்திறன் தற்போது 475 மெகா வாட்டாக உள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் இதை 10,000 மெகா வாட்டாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.