மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

ட்விட்டரில் பெண் கோரிக்கை : பரிசளித்த மோடி

ட்விட்டரில் பெண் கோரிக்கை : பரிசளித்த மோடி

ட்விட்டரில் ஷால்வையை கேட்ட ஷில்பி திவாரி என்னும் பெண்ணுக்கு பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரியன்று,கோவை வெள்ளிங்கிரி மலையில் ‌ 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடிக்கு ஆதியோகி படம் இடம்பெற்ற ஷால்வையை சத்குரு ஜக்கி வாசுதேவ் அணிவித்தார். அந்த ஷால்வையை விழாவில் பிரதமர் மோடி அணிந்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி, மோடி ஆதியோகி சிலைக்கு ஆரத்தி எடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, தன் ட்விட்டர் பக்கத்தில், ‘அந்த ஷால்வை எனக்கு வேண்டும்’ என பிரதமர் மோடியிடம் கோரினார்.

இதையறிந்த பிரதமர், அந்த ஷால்வையை கையெழுத்திட்ட கடிதத்துடன் ஷில்பி திவாரிக்கு அனுப்பிவைத்தார். சனிக்கிழமை பிரதமர் அனுப்பிய ஷால்வை மற்றும் கடிதம் ஷில்பி திவாரிக்கு கிடைத்தது. பின்னர், அந்தக் கடிதம் மற்றும் ஷால்வையை புகைப்படம் எடுத்து அதை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். தனது கோரிக்கையை ஏற்று பரிசளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பலர் மோடியை ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon