மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

செல்லாத நோட்டுகள்: நால்வர் கைது!

செல்லாத நோட்டுகள்:  நால்வர் கைது!

மத்திய அரசு தடைவிதித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும்வகையில், கடந்த நவம்பர் 8ஆம் தேதி பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று மோடி அறிவித்தார். இதையடுத்து, டிசம்பர்-31-2016க்கு மேல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கரன்சி சேகரிப்பு ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் 25 நோட்டுகள் வரை வைத்திருக்கலாம் என்றும் மற்றவர்கள் 10 நோட்டுகளுக்கு மேல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை வைத்திருந்தால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக கிழக்கு டெல்லி காசியாபாத் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் தீபக்குமார் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.49 லட்சத்துக்கு பழைய ரூபாய் நோட்டுகளையும், மாருதி கார் ஒன்றையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ள ஜுன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இவர்கள் ரூபாய் நோட்டை மற்ற முயற்சி செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லி பஞ்சாபி பாக் நகரைச் சேர்ந்த அங்கூர், காஜியாபாத்தைச் சேர்ந்த சஞ்சை, சீமாபுரி பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் மற்றும் சலீம் கான் என்பது தெரியவந்துள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon