மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

சோனி : பயனர்களின் எதிர்பார்ப்பு!

சோனி : பயனர்களின் எதிர்பார்ப்பு!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சோனி எரிக்சன் மொபைல்கள் மிக பிரபலமாக திகழ்ந்தது . அதன் காரணம் அதன புதுமையான டிசைன்கள் கொண்ட மாடல்கள் என்பதாலும், அதன் துல்லிய இசை, சிறந்த கேமாரா போன்ற பல்வேறு வசதிகளாலும் முன்னணி நிறுவனத்தின் அந்தஸ்த்தை பெற்றது. ஆனால் சோனிஎரிக்சன் நிறுவனம் அதன் பின்னர் சோனி என பெயர்மாற்றம் செய்தாலும் அதன் பயனர்கள் விகிதம் குறையாத வண்ணம் வளர்ந்து வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு அதன் விற்பனையை நிறுத்தி அதன் உற்பத்தியையும் நிறுத்திக்கொள்வதாக பொய்யான தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்னர் வெளியான உண்மையான தகவலில் இனி சோனி நிறுவனம் பிரிமியம் மற்றும் குறிப்பிட்ட மாடல்களை மட்டும் வெளியிடும் என தெரிவித்தனர். அதன் படி கடந்த ஆண்டு முதல் சோனி நிறுவனத்தின் x series மாடல்கள் வெளியாகி தொடர்ந்து நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று வெளியான தகவலில் புதிதாக sony xperia xz என்ற prime மாடல் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடல் 3GB RAM, 63GB Internal storage கொண்டுள்ளது. சோனி நிறுவனத்தின் சில மாடல்களைப் போல் இதிலும் waterproof வசதி உள்ளது. பின்புற கேமரா 23MP-யும், முன்புற செல்பி கேமரா 13MP-யும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ppi 424 புள்ளிகள் கொண்டுள்ளதால் சோனி நிறுவனத்தின் சிறந்த கேமரா மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். திரையளவு 5.2 இன்ச் அதற்கு ஏற்றாற்போல் 2900mAh பேட்டரி சக்தியும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ:47,000 என்பதால் பயனர்கள் இதனை வாங்க தயக்கம் தெரிவிக்கின்றனர். சோனி நிறுவனம் மீண்டும் குறைந்த விலை மாடல்களை வெளியிட வேண்டும் என்றே பயனர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon