மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ஓ.பி.எஸ்.ஸின் புதிய வலைதளம்!

ஓ.பி.எஸ்.ஸின் புதிய வலைதளம்!

வரும் மார்ச் 1ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகளை தனது புதிய வலைதளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததும், நீதி கேட்டு பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, தனது பயணத்தை தொடங்கும் முன், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனையின்போது, சசிகலா பொதுச்செயலாளரான பிறகு நடந்த நிகழ்வுகளையும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியையும் நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ். எடுத்துக் கூறினார். விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்நிலையில், ஓ.பி.எஸ்.க்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில், ஆஸ்பயர் சீனிவாசன் தலைமையிலான தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இதற்காக தனி வலைதளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். வி சப்போர்ட் ஓபிஎஸ் என்ற அந்த வலைதளப் பக்கத்தில் கடந்த 48 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம்பேர் இணைந்துள்ளனர். மேலும் 3 புதிய டீசர்களையும் உருவாக்கியுள்ளனர். மேலும் மார்ச் 1ஆம் தேதி வரை காத்திருங்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தீபா பேரவையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் நேற்று மாலை இணைந்தனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon