மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

மேகதாதுவில் அணை கட்டுவோம் : சித்தராமய்யா

மேகதாதுவில் அணை கட்டுவோம் : சித்தராமய்யா

மேகதாதுவில் யார் எதிர்த்தாலும் தடுப்பணையை கட்டியே தீருவோம் என்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமய்யா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகதாது குறுக்கே தடுப்பணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் திறக்கப்படும் 192 டி.எம்.சி. தண்ணீர் கட்டாயம் விடப்படும். தடுப்பணை கட்டும் விவகாரத்தில் சட்டச் சிக்கல் எதுவும் இல்லை. கோடைகாலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால், மேகதாது குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது. மேலும் இங்கு மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக மக்கள் போராட்டம் தேவையற்றது. தமிழக முதல்வர் மேகதாதுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிடமாட்டார். யார் எதிர்த்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம்" என்றார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon