மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் : முத்தரசன்

ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் : முத்தரசன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கட்சி வித்தியாசமின்றி போராடி வருகின்றனர். இந்த திட்டத்துக்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. எனவே, வறட்சி நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்தா புயல் மற்றும் வறட்சி நிவாரணம் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் வறட்சி நிவாரணம் வழங்க இதுவரை நிதி ஓதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து மக்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் நலன் சங்கம் சார்பில் வருகிற 3ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழக மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon