மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், வர்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதி கேட்டு பெறுவதற்காக முதல்வர் பழனிச்சாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் பழனிச்சாமி , நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றார். மேலும், ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதலவர், விவசாயிகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், நெடுவாசல் போராட்டக்களத்திற்குச் சென்றிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிச்சாமி பிரதமரை சந்திக்கும்போது தமிழக விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்துவார் என்று கூறியிருந்தார். அதையடுத்து, இன்று நடைபெறும் சந்திப்பில் முதல்வர் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்த்து முன்வைப்பார் என்று தெரியவருகிறது.

முதல்வருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர்களும் டெல்லி செல்கிறார்கள். பிரதமர் மோடியுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நாளை மறுதினம் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon