மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

5 மாதம் கழித்து படம் பார்த்தார் குடியரசுத் தலைவர்!

5 மாதம் கழித்து படம் பார்த்தார் குடியரசுத் தலைவர்!

பிங்க் என்ற திரைப்படம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஐந்து மாதங்களுக்கு முன்னால் செப்டம்பர் 2016இல் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியத் திருநாட்டில் பெண்களின் சுதந்திரம், அரசு இயந்திரம் ஆகியவற்றை கேள்விக்குறியில் கட்டித் தொங்கவிட்டது. அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கும் சட்டத்தில் மாற்றம் வரும்வரை ஏட்டளவில் எதையும் சாதிக்கமுடியும் என உரக்கப் பேசிய இந்தப் படத்தை இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் சமீபத்தில் கண்டிருக்கிறார். பிங்க் திரைப்படக்குழு சமீபத்தில் அமிதாப் பச்சன் தலைமையில் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்தப்படத்தை திரையிட்டிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த குடியரசுத் தலைவர் படத்தில் நடித்த நடிகர்களை மிகவும் பாராட்டியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு டாப்ஸி உள்ளிட்டவர்கள் மிகவும் பெருமையடைந்துவருகின்றனர்.

பிங்க் திரைப்படத்தின் விமர்சனம்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon