மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ஹை-டெக்காக மாறிவரும் பாமக!

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும்கட்சியான அதிமுக ஆர்வம் காட்டவில்லை, எதிர்கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தீவிரம் காட்டி வருகிறது, காங்கிரஸ் கட்சி திமுக-விடம் 20% சீட் கேட்டு வருகிறது. பாஜக-வுக்கு துணையில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்கு இன்னும் தயாராகவில்லை. பாமக உள்ளாட்சித்தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க களத்தில் இறங்கி வேலை செய்துவருகிறது. தமிழகம் முழுக்க கிராமங்களுக்குச் சென்று பாமக உறுப்பினர் சேர்க்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு கொடுப்பதற்கான வேலைகளை செய்துவருகிறது.

பாமக துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைகண்ணன் கடலூர் மாவட்டத்தில் உறுப்பினர் ஸ்மார்ட் கார்டு கொடுக்க 70% வேலைகளை எட்டியுள்ளார். குறிப்பாக ராமதாஸ், அண்புமணி ஆலோசனைபடி தலித்களை நோக்கி கிராமங்களுக்குச் சென்று தலித் மக்களிடம் பேசி அவர்களை கட்சியில் சேர்த்து வருகிறார்.

தமிழக அரசு, மக்களுக்கு ரேஷன் கார்டு, இன்னும் ஸ்மார்ட் கார்டக மாற்றித்தரவில்லை. ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இன்னும் ஸ்மார்ட் கார்டு வழங்க ஐடியா இல்லை. ஆனால், பாமக தனது உறுப்பினர்களுக்கு முதன் முதலாக ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் வழங்கவிருக்கிறது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon