மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

ஆபாச வீடியோ:இணையத்தில் பதிவிடுவதை தடுக்க இயலாது!

ஆபாச வீடியோ:இணையத்தில் பதிவிடுவதை தடுக்க இயலாது!

இணையதளங்களில் பதிவேற்றப்படும் ஆபாச வீடியோக்களால் சிறுவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். நவீன வளர்ச்சியில் தொழில்நுட்பம் வளர்வதகேற்ப அதற்கு இணையாக தீமைகளும் அதிகரித்து வருகிறது. இணையதளங்களில் பார்க்கும் ஆபாச வீடியோக்களால் சிறுவர்கள் கெட்டு போகின்றனர். இந்நிலையில் இணையதளங்களில் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க இயலாது என கூகுள் உள்பட தேடுதள நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

பாலியல் மற்றும் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பதிவிடுவதைத் தடுக்கும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்தும்படி கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் போன்ற தேடுதளங்களுக்கும், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களுக்கும், கடந்த பிப்ரவரி 1 ஆம்தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி உதய் லலித், மதன் லோகுர் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேடுதள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், யு-டியூபில் ஒரு நிமிடத்துக்கு நான்கரை மணி நேர வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றனர். இவை அனைத்தையும் கண்காணித்து தணிக்கை செய்ய லட்ச கணக்கான ஊழியர்கள் பணியமார்த்தப்பட வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை.அதனால் இணையதளத்தில் ஆபாச வீடியோகள் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க இயலாது என கூறியுள்ளனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon