மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

நாளை வங்கிகள் வேலைநிறுத்தம்!

நாளை  வங்கிகள் வேலைநிறுத்தம்!

நாளை பிப்ரவரி-28 ஆம் தேதி பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வேண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனையை கட்டாயப்படுத்தக் கூடாது, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வாரக் கடன்களை திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த முடிவு 9 வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பிப்ரவரி 28 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

வங்கி சங்கங்களில் உள்ள 27 வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் 75 சதவிகித பணப்பரிவர்த்தனை சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்த போராட்டத்தில் பங்கேற்காது என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என கருதப்படுகிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon