மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள் : மத்திய அமைச்சர்!

தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள் : மத்திய அமைச்சர்!

இந்தியாவை உடைக்க விரும்பும் எவரும் தேச விரோதிகள் தான் என்று மத்திய அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராம்ஜாஸ் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏபிவிபி இயக்கத்தினருக்கும் அகில இந்திய மாணவர் (ஏஐஎஸ்ஏ) கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மிக கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதுபெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி பல்கலை முன்னாள் மாணவரும், மத்திய அமைச்சருமான ரிஜிஜு தனது டிவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவு செய்துள்ளதில் கூறியிருப்பதாவது, "தேசியவாதத்தினை வரையறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், இந்தியாவை உடைக்க விரும்பும் எவரும், அப்சல் குரு மற்றும் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் தான்" என்றார்.

மேலும், தானும் ஒவ்வொரு அருணாசலவாசியையும் போல இந்தியாவை பாதுகாப்பேன் என்ற உறுதிமொழியுடனேயே நான் வளர்ந்தேன். ஒரு வலிமையான நாடாக இந்தியா ஒற்றுமையுடன் இல்லையெனில் சுதந்திரத்திற்கு என்ன அர்த்தம்?" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon