மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

பிளைட்லயே ஸ்டாண்டிங் அடிக்க வைப்போம்! - பாக் விமானம்.

பிளைட்லயே ஸ்டாண்டிங் அடிக்க வைப்போம்! - பாக் விமானம்.

பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள் செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக சென்றுள்ளார்கள். வடிவேலு ஒரு படத்தில் நகைச்சுவைக்காக ' நாங்கெல்லாம் பறக்கிற பிளைட்லேயே புட் போர்டு அடிப்போம்' என்பார். ஆனால் பாகிஸ்தான் புட் போர்டு தான் அடிக்கவைக்கவில்லை. எக்கச்சக்க பேர்களுக்கு டவுன் பஸ் மாதிரி டிக்கெட்டுகளை கொடுத்ததோடு அல்லாமல் பயணிகளை ஸ்டாண்டிங் அடிக்க வைத்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, சவுதி அரேபியாவின் மதீனா நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றது.இந்த விமானத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, அளவுக்கு அதிகமான அளவில் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்று பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இது குறித்த விசாரணையில், குறிப்பிட்ட பயணிகள் எண்ணிக்கைக்கு அதிகமாக 7 பேர் அந்த விமானத்தில் சென்றதும், அவர்களுக்கு கையால் எழுதப்பட்ட டிக்கெட் வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் விமானம் மற்றும் பாதுகாப்பு துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது.

409 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த விமானத்தில் பயணம் செய்ய 416 பேர் ஏறியுள்ளனர்.மொத்த இருக்கை எண்ணிக்கையை விட ஏழு பயணிகள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் விமானத்தின் நடைபாதையில் நின்று கொண்டே சவுதி அரேபியாவின் மதீனா நகர் வரை பயணம் செய்து வந்தனர். இந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளார்கள். ஒருவர் ' ஏர் பஸ்' என்பதை பாகிஸ்தான் அரசு விமானத்துறை தவறாக புரிந்து பேருந்து போலவே நிற்க வைத்து கூட்டிச் சென்றுள்ளது என கிண்டல் அடித்துள்ளார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon