மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

இன்றைய ஸ்பெஷல்: பாலக் மட்டன் உருளை!

இன்றைய ஸ்பெஷல்: பாலக் மட்டன் உருளை!

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

பாலக்கீரை - 1 கட்டு

உருளைக்கிழங்கு - 1

பூண்டு - 5 பல்

இஞ்சி - 1 துண்டு

பச்சைமிளகாய் - 3

காஷ்மீர் மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - 1/2 கோப்பை (நறுக்கியது)

ஏலக்காய் - 2

பட்டை - சிறிய துண்டு

நல்லமிளகு - 5

சீரகம் - 3/4 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - 2

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டன் துண்டுகளை சுத்தம் செய்து வைக்கவும், பாலக்கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும், உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டுகளை நறுக்கிக்கொள்ளவும் பச்சைமிளகாயை 2 ஆக கீறி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை போட்டு வதக்கவும். பாலக்கீரையைப்போட்டு கிளறிவிடவும், பாலக்கீரை வதங்கியதும் மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறி விடவும். 5 நிமிடம் கிளறி விட்டு மஞ்சள்தூள், மிளகாய்தூள் தூவி மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும். 3 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொத்தமல்லித்தழை தூவி 5 விசில் விட்டு வேகவைத்து சப்பாத்தி, ப்ளைன் சாதம் இவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon