மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

இன்றைய சினிமா சிந்தனை

இன்றைய சினிமா சிந்தனை

பிரஞ்சு திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருப்பவர், ஜீன் லுக்- கொடார்ட். மார்ட்டின் ஸ்கார்செசி, குய்ண்டின் டொரண்டினோ உள்ளிட்ட பல இயக்குநர்கள் இவரது படங்களைப் பார்த்து உத்வேகம் அடைந்தவர்கள். 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "New Wave" பிரஞ்சு சினிமா இயக்கத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். இவரது படங்கள் விவரிக்கப்படும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். Sight & Sound என்ற ஆங்கில பத்திரிக்கை இவருக்கு தலைசிறந்த 10 இயக்குநர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் வழங்கினர். இவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி கௌரவ ஆஸ்கர் விருது வழங்கினார்கள். ஆனால், அந்த விழாவுக்கு இவர் செல்லவில்லை. விருதுகளை பெரிதாக மதிக்காத கலைஞனான இவர் கூறும் சினிமா சிந்தனையை கீழே காண்போம்.

ஒரு கதைக்கு ஆரம்பமும் மையமும் முடிவும் இருக்கவேண்டும். ஆனால், அவை இதே வரிசையில் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon