மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

தீபா யாரென்றே தெரியாது : தம்பிதுரை

தீபா யாரென்றே தெரியாது  :  தம்பிதுரை

சொந்த பெயரில் கட்சி தொடங்கியதையடுத்து தீபாவின் அரசியல் அனுபவம் இல்லாத செய்கை வெட்டவெளிச்சமாகியுள்ளது என தம்பிதுரை கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக மக்களவை எம்.பி.யும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றப் போவதாக கூறும் தீபா அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. மேலும் தனது சொந்தப் பெயரில் இதுவரை யாரும் கட்சி தொடங்கியதில்லை. இது போன்ற செயல்கள் மூலமாக தீபாவுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதையே காட்டுகிறது.

ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வில்லை. இப்போது மக்களை சந்திக்கப் போவதாக கூறும் அவர் உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபிப்பேன் என்கிறார். மக்கள் ஆதரவு எப்போதும் அதிமுகவு-க்கு மட்டுமே உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை டெல்லி செல்வதற்காக தம்பிதுரை விமானநிலையத்திற்கு சென்றபோது, செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், அவர் யாரென்றே தெரியாது என்றும் கூறினார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon