மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

எட்டப்பர்களுடன் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் திட்டம் : நாஞ்சில் சம்பத்

எட்டப்பர்களுடன் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் திட்டம் :  நாஞ்சில் சம்பத்

எட்டப்பர்கள் துணையுடன் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் திட்டமிட்டார் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

திண்டுக்கல் ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக செய்தி தொடர்புகுழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

திராவிட இயக்கம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. காலம் தந்த காவியத் தலைவி ஜெயலலிதா, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த அரசியல் அடையாளமாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பின் அதிமுக-வை கட்டிக்காத்து மிகப்பெரிய இயக்கமாக உருவாக்கினார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அதிமுக 2-ஆக உடைந்தது. இப்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் துரோகிகளால் அதுதான் நடந்துள்ளது.

எட்டப்பர்களை பயன்படுத்தி கொல்லைப்புறமாக ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டவர் ஸ்டாலின். ஓ.பி.எஸ். எப்போதும் தற்காலிக முதல்வர்தான். நிரந்தர முதல்வராக நினைக்க கூடாது. அவரும் அவரது ஆதரவாளர்களும் கட்சியை விட்டு வெளியேறியதால் அதிமுக தற்போது பரிசுத்தமாக உள்ளது என்று அவர் பேசினார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon