மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

அதிர்ச்சி அளிக்கும் மோடியின் பேச்சு : மணிப்பூர் முதல்வர்!

அதிர்ச்சி அளிக்கும் மோடியின் பேச்சு : மணிப்பூர் முதல்வர்!வெற்றிநடை போடும் தமிழகம்

மணிப்பூரில் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 3 முறை முதல்வராக இருந்து வரும் ஒக்ராம் இபோபி சிங் 4வது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் நாகா கவுன்சில் தீவிரவாதிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதமாக பொருளாதார முற்றுகை போராட்டம் நடத்தி வருவதால் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் டிரக்குகள் எல்லையிலேயே தடுக்கப்பட்டு விட்டன. இந்த சூழலில் மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று இம்பாலில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், மணிப்பூரில் பொருளாதார முற்றுகை போராட்டத்தை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சி 15 ஆண்டுகளில் செய்யத் தவறியதை 15 மாதங்களில் செய்து காட்டுவோம் என்றும் மோடி பேசினார். மோடியின் இந்த பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொருளாதார முற்றுகை போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடியின் பேச்சுகள் எதிர்பாராத ஒன்றாகும். காங்கிரஸ் பொய்களை பரப்பி மக்களை பிளவுபடுத்துவதாகவும், மத்திய அரசு மாநில ஒற்றுமைக்கு முயற்சி எடுப்பதாகவும் கூறியுள்ளார். மணிப்பூர் ஒற்றுமைக்காக நாகா கவுன்சிலுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுகள் எதிர்பாராத ஒன்றாகும். இதுகுறித்து அவர் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும். பாஜகதான் தவறான தகவல்களை கூறி மக்களை திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ளது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி வந்ததும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வட கிழக்கு மாநிலங்களுக்கான 30 சதவீத பொருளாதார மானிய கொள்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதுதான் பாஜக அரசின் கொள்கை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள் 90 முறைக்கும் மேலாக வந்து சென்றுள்ளனர். அவர்கள் எதற்காக வந்து சென்றனர் என்று தெரியாது. மணிப்பூரில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon