மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

தண்ணீருக்குள் உடற்பயிற்சி செய்யுங்கள்!

தண்ணீருக்குள் உடற்பயிற்சி செய்யுங்கள்!

உடற்பயிற்சிகளை எளிதாக தண்ணீருக்குள் செய்ய முடியும். இடுப்பளவு தண்ணீரில் உடல் எடையானது 40 சதவிகிதம் குறைந்துவிடும். மார்பளவு தண்ணீரில் 60 சதவிகிதம் எடையானது குறைந்துவிடும். கழுத்தளவு தண்ணீரில் 90 சதவிகிதம் குறைந்து கிட்டதட்ட பலூன் போல மிதக்க ஆரம்பிப்போம். தண்ணீருக்குள் பயிற்சிகளை செய்யும் போது, அசைக்க முடியாத மூட்டுகள், வேலை செய்யாத தசைகளையும் எளிதாக வேலை செய்ய வைக்க முடியும். வலியும் பெரிதாக இருக்காது. இதையெல்லாம் முறையான பயிற்சிகளாக பிஸியோதெரபியில் கொண்டுவந்தார்கள். இதை 'ஹைட்ரோ தெரபி' என்று அழைக்கிறார்கள். இந்தப் பயிற்சி முறைகளை `பேட் ரகாஸ் (Bad ragaz) டெக்னிக்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.

வலி இல்லாமலும் உற்சாகமாகவும் ஹைட்ரோதெரபி சிகிச்சை முறைகள் இருப்பதால் நோயாளிகளும் மிக ஆர்வமாக

செய்கிறார்கள். ஹைட்ரோதெரபி பயிற்சிகளால் தசைகளும், மூட்டுகளும் பயன்பெறுகின்றன என்பது ஓரளவு

எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இவை தவிர சுவாசமும் சீராக இருக்கும். இதயம் சரியான முறையில் இயங்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்கள் நல்ல முறையில் இயங்க ஆரம்பிக்கும். சிறுநீர் வருவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்பவர்களுக்கு தெளிவான நிறத்தில் சிறுநீரானது வரும். மலச்சிக்கல் பிரச்னைகளும் இருக்காது. மன உளைச்சலை தவிர்க்க நினைப்பவர்கள் இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். உடல் வலி உள்ளவர்கள், பார்வைக்குறைபாடு உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முதுகு தண்டுவடத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சைகள் நல்ல பலனைத் தரும். எனவே நீச்சல் குளத்தில் நீச்சலடித்து தான் இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை,நீச்சல் குளத்தினுள் இறங்கி நடத்தலும், தரையில் செய்யும் சிறிய உடற்பயிற்சிகளை தண்ணீருக்குள் செய்தாலும் வழக்கமான பயிற்சிகளை விட மூன்று மடங்கு பலன் தரும் என்கிறார்கள் இயன்முறை மருத்துவர்கள்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon