மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

விஜய் அல்ல விஜய் ஆண்டனி - களமிறங்கும் சீமான்!

விஜய் அல்ல விஜய் ஆண்டனி - களமிறங்கும் சீமான்!

1996 ஆம் ஆண்டு வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சீமான். அதன்பிறகு ‘தம்பி’, ‘வாழ்த்துக்கள்’ என சில மறக்கமுடியாத படங்களை கொடுத்திருக்கிறார். நடிகராக பல படங்களிலும் நடித்துவிட்டார். முழுநேர அரசியல்வாதியான பின்பு சீமான் திரைத்துறையிலிருந்து விலகியே இருந்தார். சீமான் ஒருமுறை சிறை சென்றிருந்த வேலையில் தன் படக்கதை ஒன்றை சிறப்பாக வடிவமைத்திருப்பதாக கூறியிருந்தார்.

‘பகலவன்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்தது. அந்தத் திரைப்படம் சீமானின் அரசியல் சூழலால் கைவிடப்பட்டது. ஆனால் அந்தக் கதையை தற்போது விஜய் ஆண்டனியை வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon