மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

விமானப் போக்குவரத்து : இந்தியா - கிரீஸ் ஒப்பந்தம்!

விமானப் போக்குவரத்து : இந்தியா - கிரீஸ் ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கிடையே வரம்பற்ற அளவில் ஆறு குறிப்பிட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதியில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுடனான விமானப் போக்குவரத்து பாதுகாப்பை பலப்படுத்தும் ஒப்பந்தத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிரீஸ் நாட்டுடனான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய விமானங்கள் ஏதென்ஸ், தெசலோனிகி, கெரக்லியன் ஆகிய மூன்று இடங்களுக்கு விமானங்களை இயக்கும். இன்னும் மூன்று இடங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும். அதேபோல, கிரீஸ் நாட்டு விமானங்கள் இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களுக்கு வந்துசெல்லும். இதுபற்றி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த ஒப்பந்தம் மூலமாக இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு வலுப்படுவதோடு, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் முதலீடுகளும் அதிகளவில் ஈர்க்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவுடன் விமானப் போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. இதன்படி, அந்நாட்டின் தலைநகரான கிகாலியிலிருந்து மும்பைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இச்சேவை ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon