மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தக நாடு சீனா!

ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தக நாடு சீனா!

அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ஜெர்மனியுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் மிகப்பெரிய நாடாக சீனா முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக சீனா முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் மூன்றாவது இடத்திலிருந்த சீனா, அமெரிக்கா மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மதிப்பு 170 பில்லியன் யூரோவாக உள்ளது என்று சீன அரசின் புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயான வர்த்தகம் 167 பில்லியன் யுரோவாகவும், அமெரிக்காவுடன் 165 பில்லியன் யூரோவாகவும் உள்ளது. ஜெர்மனியுடனான வர்த்தகத்தில் 1961ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் சீனா முதலிடம் பிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டினுடனான வர்த்தக இறக்குமதி 101 பில்லியன் யுரோவாகவும், ஏற்றுமதி 86 பில்லியன் யுரோவாகவும் உள்ளது. ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 49 பில்லியன் யுரோவாக உள்ளது. அதேபோல ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்துக்கான ஏற்றுமதி 50 பில்லியன் யுரோக்களாக உள்ளது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon