யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில்(யு.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள வழக்கறிஞர், துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், இயக்குநர் ஜெனரல், துணை இயக்குநர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
பணியிடங்கள் : 63
வயது வரம்பு: 30-53
கல்வித் தகுதி: சட்டம், வேதியியல் துறையில் முதுகலை பட்டம், கணினி பயன்பாட்டில் முதுநிலை பட்டம், தாவரவியல் மற்றும் புவியியலில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்:ரூ.25/- எஸ்சி /எஸ்டி மற்றும்பெண்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 16.03.2017.
மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/sites/default/files/Advt04-17EmpORA0.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.