மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அரசியலில் விருப்பமில்லை : நிதிஷ் மகன்!

அரசியலில் விருப்பமில்லை : நிதிஷ் மகன்!

அரசியலில் ஈடுபட விருப்பமில்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் பொறியியல் பட்டதாரியான இவர் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தநிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. எனவே அரசியலில் ஈடு படமாட்டேன்.அரசியலை விட ஆன்மிக வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறேன் எனது தந்தை நிதிஷ்குமார் பீகாரின் வளர்சிக்காக கடினமாக உழைத்து வருகிறார். தந்தையின் மீது நம்பிக்கை வைத்து அவரை மூன்றாவது முறையாக மக்கள் முதல்வராக்கியுள்ளனர். அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார் என்றார்.

நிஷாந்த்குமார் அரசியலில் எப்போதும் ஈடுபடமாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்துள்ள லாலு பிரசாத்தின் 2 மகன்கள் தீவிர அரசியலில் உள்ளனர். லாலுவின் மகள் எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon