மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

இல.கணேசனை கிண்டல் செய்த நாராயணசாமி!

இல.கணேசனை கிண்டல் செய்த நாராயணசாமி!

ஹாட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு, பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது தமிழகத்தில், தீ பொறியாக மக்கள் போராட்டம் நெடுவாசல் கிராமத்திலிருந்து பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்தான் தமிழக பாஜக முன்னால் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான இல.கனேசன் நேற்று முன்தினம் 25ஆம் தேதி, புதுச்சேரி வந்தபோது, ஒரு நாடு நல்லாயிருக்க, ஒரு மாநிலம் பாதிக்கப்படலாம் . ஒரு மாநிலம் நல்லாயிருக்க ஒரு மாவட்டம் பாதிக்கப்படலாம். ஒரு மாவட்டம் நலமாயிருக்க, ஒரு ஊர் பாதிக்கப்படலாம். ஒரு ஊர் நல்லாயிருக்க ஒரு தனிமனிதன் தியாகம் செய்யலாம். நலத்திட்டம் கேட்கும் மக்கள் நிலம் கொடுக்க மறுத்தால், நலத்திட்டங்களை வானத்திலேயா நிறைவேற்ற முடியும். எதுக்கு எடுத்தாலும் போரட்டம், போராட்டம். கிராம சுயாட்சியே, நாட்டுக்கு விடுதலை என்றார் காந்தி. ஆனால் புதுச்சேரியில் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம்போய்விடும் என்று, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்கிறார்கள். இந்த பிரச்னை குறித்து ராஜ்யசபா கூட்டத்தில் எழுப்புவேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இல.கணேசன் கூறியது குறித்து , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ஏற்கனவே பாஜக பல மாநிலத்தில் காணமல் போய் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருக்கு. இல.கணேசன் பேச்சால் இன்னும் பலவீனமாக போய்விடும் என்று கூறினார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon