மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

வெங்காய ஏற்றுமதி : ரஷ்யாவை குறிவைக்கும் இந்தியா!

வெங்காய ஏற்றுமதி : ரஷ்யாவை குறிவைக்கும் இந்தியா!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வெங்காயத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் ரஷ்ய சந்தையில் வெங்காயத்திற்கு அதிக தேவையும், நல்ல விலையும் உள்ளது. எனவே இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் ரஷ்ய சந்தையை குறிவைத்துள்ளன.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வெங்காயங்களை காயவைத்து, 2 கிலோ, 10 கிலோ ஆகிய எடைகளில் சந்தைப்படுத்துகின்றன. உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் கிலோ 7 ரூபாயாக உள்ளது. ரஷ்யாவில் 2016-17 பருவத்தில் வெங்காயத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேபோல, திராட்சை மற்றும் உருளை ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளதால், இவையும் ரஷ்ய சந்தைகளுக்கு ஏற்றுமதியாகவிருக்கின்றன.

ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்களுக்கு எகிப்து போட்டியாக உள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கவலையில்லை. வெங்காயம் ஒரு பொருள் மட்டுமே இதற்கு சந்தை பகுதிகள் இல்லை என்றாலும் நல்ல விலை உள்ளது. வாடிக்கையாளர்கள் நல்ல தரமுள்ள வெங்காயத்தையே அதிகம் வாங்குகின்றனர். நிறுவனங்கள் இதை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு செயல்படும். ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் கிழக்கு நாடுகளில் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளது. ஏற்கனவே 5 சரக்கு கப்பல்களில் கருப்பு திராட்சைகள் சீனாவின் ஷாங்காய், சென்ஜென், பீஜிங் ஆகிய நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது