மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

ராணுவத்தேர்வு வினாத்தாள் லீக்: 18 பேர் கைது!

ராணுவத்தேர்வு வினாத்தாள் லீக்: 18 பேர் கைது!

இந்திய ராணுவ பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பாதுகாப்பு படை பணியில் நிரப்படவுள்ள ஸ்ட்ராங்மேன், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட 52 பணியிடங்களில் சேர நாடு முழுவதும் இன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கம்ப்தீ, , நாக்பூர், அகமத் நகர், அகமதாபாத், கோவா மற்றும் கிர்கீ பகுதியில் வினாத்தாள் வெளியானதால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, தானே அருகே ராணுவத் தேர்வு வினாத்தாள் வெளியானதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாக்பூர், புனே, நாசிக் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி தேர்வு அறைக்கு செல்லாமல் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் இருந்தவாறே விடைகளை எழுதியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் சுமார் 350 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த மாணவர்களுக்கு தேர்வுக்கு பயிற்சி அளித்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர். இந்த குற்ற செயல்களுக்கு பின்னால் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், தொடர்பிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேர்வு எழுதயிருந்த மற்ற மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon