மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

தீக்குளிக்க முயற்சி: தீபா அதிர்ச்சி!

தீக்குளிக்க முயற்சி: தீபா அதிர்ச்சி!

எம்.ஜி.ஆர் - அம்மா - தீபா பேரவை தொடங்கிய இரண்டு நாட்களில் நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிராக தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பெண் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் தீபா அதிர்ச்சியடைந்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் - அம்மா - தீபா பேரவையைத் தொடங்கினார். அமைப்பை தொண்டங்கிய அன்றே அமைப்பின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அதன்படி கட்சியின் பொருளாளராக தீபாவும், தலைவராக சரண்யா மற்றும் செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை தீபா விடு முன்பு திரண்ட அவரின் ஆதரவாளர்கள் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜாவின் செயல்பாடுகள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவரை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அப்போது, அந்தப் பகுதி வழியாக வந்த தீபா கணவர் மாதவனின் காரை முற்றுகையிட்டு, நீங்கள் பேரவையின் செயலாளராக இருங்கள் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் , ராஜாவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவரை ஏந்த அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்திர்கள் என அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அவர்களை,சமாதனப்படுத்த மாதவன் முயற்சி செய்தார் ஆனால் தீபாவின் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் தங்களது போராட்டங்களை மீண்டும் தொடர்ந்தனர்.

பின்னர், தீபா ஆதரவு நிர்வாகியான பம்மல் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் " நமது அமைப்பில் உள்ள பிரச்னைகளை பேசித்தான் தீர்க்க வேண்டும். இப்படி போராட்டம் நடத்தகூடாது என்று தெரிவித்தார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசி என்ற பெண் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். ராஜாவை பற்றி ஆர்.கே.நகரை சேர்ந்த சுகன்யா என்பவர் கூறுகையில், "ராஜா என்னென்ன செய்தார் என்பது பற்றி வாரப் பத்திரிகை ஒன்றிலும் செய்தி வெளிவந்துள்ளது. இதுபோன்று நடந்து கொண்டவரை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.

பேரவை தொடங்கிய இரண்டு நாட்களில் பேரவை நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிராக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தீபா அதிர்ச்சி அடைந்துள்ளார். தீபா வீட்டு முன்பாக பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon