மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

ஐ.பி.எல். : எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்!

ஐ.பி.எல். : எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்!

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் பெரும் அனுபவமுள்ள வீரர்கள் பலரும் எந்த அணியினராலும் ஏலம் கேட்கப்படாமல் போனது ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இதுவரை ஒருசில போட்டிகளே விளையாடிய டைமல் மில்ஸ் போன்ற வீரர்கள் ஏன் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்பதும் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று அவர்கள் அதிக கவனம் செலுத்திய புதுமுகங்கள் அனைத்தும் பந்துவீச்சாளர்கள். இதற்கான காரணம் புதுமுக வீரர்கள் பந்துவீசும் பொழுது அவர்களின் பந்துவீச்சு விதம் பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அதைச் சரியாக பயன்படுத்தி ரன்களை கட்டுப்படுத்தி வெற்றிபெறவே இந்த முடிவினை எடுத்துள்ளனர் அணியின் உரிமையாளர்கள்.

இது ஒருபுறம் இருக்க, முக்கியான வீரர்கள் அவர்களின் ஆரம்ப விலைக்கே சில அணிகளால் எடுக்கப்பட்டது மற்றொரு புறம் புரியாத ஒன்றாகவே இருக்கிறது. உதாரணமாக வெஸ்ட் இண்டியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேரன் சமி பஞ்சாப் அணியினால் 30 லட்சத்திற்கு, ஏலம் எடுக்கப்பட்டார். அதே அணியை சேர்ந்த பிராவோவின் சகோதரர் டேரன் பிராவோ சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக இருப்பினும் அவரும் 50லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் பெறப்பட்டார்.

அவர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன்ட்ரு டை, பில்லி ஸ்டான்லக் போன்றோரும் குறைந்த தொகைக்கே ஏலம் எடுக்கப்பட்டனர். அதேபோல் இந்திய அணியின் இசாந்த் ஷர்மா மற்றும் இர்பான் போன்ற வீரர்கள் எந்த அணியினராலும் ஏலம் கேட்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்த பல வீரர்கள் இந்தமுறை எந்த அணியினராலும் ஏலம் பெறப்படாமல் போனதும், பூனே அணியின் கேப்டன் பதவியிலிருந்து டோனி விலகியதும் ஏமாற்றமே.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon