மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

காமெடி நடிகர் தவக்களை காலமானார்!

காமெடி நடிகர் தவக்களை காலமானார்!

1983ஆம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் தவக்களை. தன் நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்து திரைத்துறையில் நீண்ட காலமாக பணிபுரிந்திருக்கிறார்.

தவக்களை 496 படங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். கமல் நடித்த ‘காக்கி சட்டை’ படத்தின் ‘சிங்காரி சரக்கு’ பாடலில் இவரது நடனம் அசத்தலாக இருக்கும். ‘ஆண் பாவம்’ படத்தில் இவரது காமெடிக் காட்சி மிகவும் பிரபலம். தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்த ‘மாயா மச்சீந்திரா’ சிறுவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார். தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon