மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

அதிமுக எம்.எல்.ஏ.சிறைப்பிடிப்பு: ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!

அதிமுக  எம்.எல்.ஏ.சிறைப்பிடிப்பு: ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!

அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமாரை சிறைபிடித்து ராஜினாமா செய்யக்கோரி அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சொக்கனூரில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் சென்றனர்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் இரவு 9.15 மணியவில் திருப்பூர் புறப்பட்டனர். சொக்கனூர் பாரதிநகர் அருகே வந்தபோது அதிமுக கிளைச்செயலாளர் சங்கீதா தலைமையிலான தொண்டர்கள் திரண்டனர். எம்.எல்.ஏ., விஜயகுமாரின் காரை வழிமறித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர். தொகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்தபோது கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ., எங்களுக்கு தேவையில்லை. உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து சசிகலா ஆதரவு அதிமுக-வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கார் விடுவிக்கப்பட்டது.

கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, தனது வளர்ப்பு தாய் இறந்ததுக்கு கூட எம்.எல்.ஏ. விஜயகுமார் வராமல் இருந்தவர் என்று பொதுமக்கள் குறைகூறினர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon