மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

லண்டனை குறை கூறிய அருண்ஜெட்லி

லண்டனை குறை கூறிய அருண்ஜெட்லி

லண்டன் ஸ்கூல் ஆஃப் இகானமிக்ஸ், தெற்காசிய மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அருண் ஜேட்லி கூறியதாவது: வங்கிகளிலிருந்து கடன் பெற்றால் அதனை திருப்பி செலுத்த வேண்டிய தேவையில்லை, லண்டனுக்கு வந்து நிரந்தரமாக தங்கி விடலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்குள்ள தாராளமய ஜனநாயகமும் இத்தகையோர் தங்க அனுமதி அளிக்கிறது. இந்த ‘இயல்பு’ நிலையை உடைக்க வேண்டும்.

முதல் முறையாக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, நிதிமுறைகேடு செய்யும் பேர்வழிகள் நாட்டை விட்டு ஓடுகின்றனர், அவர்கள் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. இதுதான் இந்தியா முதல் முறையாக இவர்களுக்கு விடுக்கும் செய்தியாகும். இல்லையெனில் முறைகேடு செய்து விட்டு தப்பியோடுபவர்களுடன் நாம் வாழவே பழகியிருப்போம். இவ்வாறு கூறினார். அருண்ஜெட்லி விஜய் மல்லய்யாவை குறிவைத்தே இவ்வாறு பேசியிருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரிட்டன் அமைச்சர்கள், பிரிட்டன் வெளியுறவு செயலர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை நாளை (திங்கள்) சந்திக்கும் போது மல்லையா விவகாரம் விவாதிக்கப்படுமா என்பது பற்றி ஜேட்லி உறுதியாகக் கூறவில்லை. இருப்பினும், லண்டனில் உள்ள மூத்த அதிகாரிகள் மல்லையா விவகாரமும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon