மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

பிளஸ்-2 மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச்,பெல்ட் அணிய தடை!

பிளஸ்-2 மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச்,பெல்ட் அணிய தடை!

வருகிற மார்ச் இரண்டாம் தேதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவிருக்கிறது. இந்நிலையில்,பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 'பெல்ட், ஸ்மார்ட் வாட்ச்,' அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன் தேர்வறைக்குள் வரக் கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது.

தேர்வு மையவளாகத்திற்குள், மொபைல் போன் எடுத்துவரக் கூடாது. அப்படியே எடுத்து வந்தால்அதை தங்கள் உடைமைகளுடன், வளாக அறையில் தான் வைக்க வேண்டும்.

காலணிகளை வளாகத்துக்குள்ளே கழிற்றிவிட்டு வர வேண்டும். தேர்வறைக்குள் காலணியும்,பெல்ட் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெரியளவிலான ஆடைகளை பெல்ட் மூலம் இறுக்கி அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

தேர்வறையில் கடிகாரம் பொருத்தப்பட்டிருப்பதால்,மாணவர்கள் வாட்ச் அணிய தேவையில்லை. சாதாரண எந்தவித கூடுதல் வசதி இல்லாத வாட்ச் மட்டும் அணிந்து கொள்ளலாம். தேர்வறையில் பொருத்தப்பட்டிருக்கும் கடிகார நேரத்தின்படிதான் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும்.

தேர்வில், தாம் எதிர்ப்பார்த்த மதிப்பெண் கிடைக்காத என தெரியவரும் வேளையில், தேர்வில் தோல்வி அடையும் வகையில் எழுதிய விடைத்தாளை தாங்களே அடிக்கக் கூடாது. அப்படி செய்தால், அடுத்த இரண்டு பருவத்திற்கான தேர்வுகளை எழுத அனுமதி கிடையாது.

தேர்வறையில்,கண்காணிப்பாளர்களுடன் மாணவர்கள் வாக்குவாதம் செய்யக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பனிரெண்டாம் பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 9.30 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர். மேலும், தமிழ் வழியில் கற்போரில் , 5.69 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon