மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 நவ 2019

ஆக்‌ஷன் நாயகி ‘சிம்ரன்’

ஆக்‌ஷன் நாயகி  ‘சிம்ரன்’

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார். கௌரவ வேடமோ அல்லது முக்கியமான கதாபாத்திரமோ கிடைத்தால் மட்டுமே நடித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் தோன்றிய கதாபாத்திரங்கள் எல்லாம் தைரியமான பெண்மணியின் வேடங்கள் தான். ‘கரையோரம்’ மற்றும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரம் அவ்வாறு தான் அமைந்திருந்தது. தற்போது அவர் அரவிந்த் சாமி மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் புதிய படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சிம்ரனின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon