மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

மறைந்துவரும் ஜெ.வின் தொலைநோக்குத் திட்டம் 2023!

மறைந்துவரும் ஜெ.வின் தொலைநோக்குத் திட்டம் 2023!

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கி வேலைவாய்ப்புகளை அதிகரித்து, வேலைவாய்ப்புத் திண்டாட்டங்களைப் போக்குவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023 என்று, கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 9,10 ஆகிய இரு தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அரங்கத்தில் நடத்தினார்.

மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துக்கொண்டு, தமிழகத்தில் தொழில் செய்வதற்கு ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்து சிலர் ஒப்பந்தமும் போட்டார்கள். அதன்பின்னர், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக ஜெயலலிதா கோட்டையில் அமர்ந்தார். ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், முதலீட்டாளர்கள் யோசிக்கத் துவங்கினார்கள். யாரை நம்பி முதலீடு செய்வது என்று, கொஞ்சம், கொஞ்சமாக பக்கத்து மாநிலங்களுக்கு தாவினார்கள். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த டிசம்பர் மாதம் மறைந்தார். தமிழகத்தில் முதல்வர்களும் மாறிக்கொண்டிருக்க, நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை மறந்துவிட்டார்கள். தொழில் செய்வதற்கு முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான, தமிழ் நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ம் மெல்ல,மெல்ல மறைந்துவருகிறது என்கிறார்கள் தொழில்துறை அதிகாரிகள்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon