மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

தவமாய் தவமிருந்த விஜய் சேதுபதி?

தவமாய் தவமிருந்த விஜய் சேதுபதி?

நீண்ட காலமாக திரைத்துறையில் பணிபுரிந்த விஜய் சேதுபதி, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சூது கவ்வும்’ ஆகிய மூன்று திரைப்படங்களால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனார். இந்த மூன்று படங்களை இயக்கியவர்களும் அறிமுக இயக்குநர்கள். விஜய் சேதுபதி சிறந்த நடிகரென பெயரெடுத்த பின்பும் அவரை தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்கள் யாரும் புக் செய்யவில்லை.

தற்போது இயக்குநர் சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமுதாய பிரச்சினைகள் பற்றியும் மனித உறவுகள் பற்றியும் தன் திரைப்படங்களின் மூலமாக அழகாய் சித்தரிக்கக்கூடியவர் சேரன். ‘ஆட்டோகிராப்’, ‘வெற்றிக் கொடிகட்டு’ மற்றும் ‘தவமாய் தவமிருந்து’ போன்ற தேசிய விருது பெற்ற படங்களை தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார். இவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படமும் குடும்ப உறவுகள் சார்ந்தது தான். ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon