மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட தயார் : ஹெச். ராஜா

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட தயார் : ஹெச். ராஜா

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மாணவர்களும், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே, நெடுவாசலிலும் சில அமைப்புகள் உள்ளன. எந்த திட்டம் கொண்டு வந்தாலும், ஆதாரமில்லாமல் பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. மேலும் நெடுவாசல் மக்கள் வேண்டாம் என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட தயார் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon