மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

எட்டு மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு!

எட்டு  மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு!

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த 8 மீனவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிச்சாமி பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாகப்பட்டினம் திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன், ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஊத்துக்காட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப். திருநெல்வேலி, ராதாபுரம் விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி, நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், வானூர் பொம்மையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், கடலூர் முதுநகர், அக்கரைகோரி முகத்துவாரப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற குணசேகரன் ஆகிய எட்டு மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிழந்த மேற்கண்ட எட்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon