மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மாணவர்கள் அபார வெற்றி !

டிஎன்பிஎஸ்சி குரூப் 4: மாணவர்கள் அபார வெற்றி !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் கணேஷ் ஐஏஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 120 மாணவர்கள் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இளநிலை உதவியாளர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2016 நவம்பர் 6 ஆம் தேதி நடத்தப்பட்டது.தேர்வு முடிவுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கணேஷ் ஐஏஸ் பயிற்சி மையத்தில் படித்த 120 க்கும் அதிமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய மையத்தில் பயிற்சி எடுத்த மாணவர்களும் பெரும் அளவில் இந்த குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு,கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பதரர்கள் மட்டும் அனுமதிப்படுவார்கள். கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு சில யோசனைகளும் வழங்கியுள்ளார்கள்.

10 ஆம் வகுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகியவை விண்ணப்பத்தில் குறிப்பிட்டது போலவே இருக்க வேண்டும். கல்வித் தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ் அசல் கொண்டுவர வேண்டும். கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 98402 41118 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்கள்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon