மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

மோடிக்கு எதிராக அகிலேஷ் யாதவ், மாயாவதி

மோடிக்கு எதிராக அகிலேஷ் யாதவ், மாயாவதி

அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மோடியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து உரையாற்றியிருக்கின்றனர்.

சித்தார்த்நகர் பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ், “ பிரதமரே, பரீட்சையில் காப்பி அடிப்பது பற்றி பேசியிருக்கிறீர்கள்... லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து யார் யாரை காப்பி அடித்தது?” என்றார். “தன்னுடைய பெயர் பதித்த ஆடை அணிந்த ஒரு பெரிய மனிதர் இருக்கிறார்.. பாஜக மக்களை கேட்கிறேன்.. முதன் முதலாக தன் பெயர் அச்சடித்த ஆடையை அணிந்தது யார்? நீங்கள் கூடத் தான் காப்பி அடித்திருக்கிறீர்கள் என நான் சொல்வேன்” என அகிலேஷ் யாதவ் பேசியிருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் வாக்குறுதி பாஜகவில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என மோடி குற்றம் சாட்டியதற்கு பதிலாக “ பரீட்சைகளில் தேறுவதற்காக காப்பி அடிக்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா.. பிரதமரே, நீங்களும் தான் வெவ்வேறு காரியங்களில் காப்பி அடிக்கிறீர்கள்” என்றார் அகிலேஷ் யாதவ்.

டியோரியாவில் நடந்த கூட்டத்தில் பேசிய மாயாவதி, “ குருவுன் சேலாவும் நாட்டை சீரழித்து விட்டனர்.. குரு என்றால் மோடி...சேலா என்றால் அமித் ஷா.. இப்போது அவர்கள் உத்தரப்பிரதேசத்தை சீரழிப்பது குறித்து கனவு காண்கிறார்கள்” என்றார். மாயாவதியும் அகிலேஷ் யாதவும் அத்தையும் மருமகனும் போல என பாஜக தலைவர்கள் குறிப்பிட்டு பேசினர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon