மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

தமிழ்நாட்டுக்கே தியாகி பென்ஷன் கொடுக்கணும் - அப்டேட் குமாரு!

தமிழ்நாட்டுக்கே தியாகி பென்ஷன் கொடுக்கணும் - அப்டேட் குமாரு!

கச்சத்தீவை விட்டுக்குடுத்ததுல இல்லை, அதுக்கும் முன்னாடியே தியாகம் செஞ்ச வரலாறு தமிழ்நாட்டுக்கு அதிகம். ஜெ.வுக்காக காவிரியே வேண்டாம்னு சொன்ன தேசம் எண்ட தேசம். கர்நாடகாவுக்கு ஆள் பற்றாக்குறைன்னு சமீபத்துல கூட 3 பேரை அனுப்பி வெச்சோம். முதல்வர் யாருன்னே தெரியாம ஒரு வாரம் வாழ்ந்தோம். இதையெல்லாத்தையும்விட, இன்னைக்கு அமாவாசையாச்சேன்னு கறி-மீன் சாப்பிடாம. சன்டே-வை கூட தியாகம் செஞ்சுட்டு உக்காந்திருக்கோம். எங்களைப் பார்த்து இன்னும் தியாகம் செய்ய சொல்றீங்களா? முதல்ல செஞ்ச தியாகத்துக்கெல்லாம் தியாகி பென்சன் கொடுங்க. இப்ப அப்டேட்டைப் பாருங்க.

//Muthu Ram

இன்னைக்கி அமாவாசைனு கறிக்குழம்ப தியாகம் பண்ணிட்டு உக்காந்துருக்கேன். எதாவது தியாகி பென்சன் கெடைக்குமா பாஸ்?//

\\Dhana Sakthi

ஆணாக மாறி ஆண்கள் உலகத்துக்குள்

என்ன நடக்குது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது

சீக்கிரமே பேக் ஃஐடில

வாரேன்\\

\\Manoj B

நான் உலகசினிமா ரசிகன் கிடையாது…

அதே சமயம் விண்ணைத் தாண்டி வருவாயா வும் புடிக்காது…

வெறுப்பேத்தாம வேலையப் பாக்க விடுங்க\\

//Santhiya Palani

கோயமுத்தூர், மணிப்பூர்ன்னு ஒரே லோக்கல் ட்ரிப்பா போயிட்டுருக்கார்! என்ன தான் ஆச்சு நம் நாட்டுக்கு! //

\\@Tamil_zhini

கஷ்ட படுத்துறாங்கனு தெரிஞ்சு

கூடவே இருந்து கஷ்ட படுறது எல்லாம் எவ்ளோ பெரிய விதியின் சதி தெரியுமா\\

\\@palanikannan04

நல்ல திட்டமெல்லாம் மற்ற மாநிலங்களுக்கும்,

நாசமான திட்டங்களெல்லாம் தமிழ்நாட்டுக்கும் கொடுக்கறதே இந்த மத்திய அரசுக்கு வேலையா போச்சு\\

\\@stalinsk50

சிறையில் சசி சுயசரிதை எழுதுகிறார்..

சுயசரிதைக்கு உண்டான மரியாதை போச்சு\\

\\அ.ப. இராசா

தமிழக நலனுக்காக நான் ஏன் பிஜேபியை பலி கொடுக்க கூடாது?\\

\\@Selvaa

இப்ப சமீபமா தான் இதெல்லாம் நடக்குறா மாதிரி தெரியுது..

ஜெ மறைவு பின் தமிழக அரசியல் நிலை நிறைய மாறுது..\\

\\@senthilcp

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் கைவிடப்படும்: தமிழிசை # மண்ணைக்கவ்வினாலும் மீசைல மண் ஒட்டலை மொமெண்ட்\\

//Mohemed Ismail Vm

தமிழகம் நல்லா இருக்கணும்னா பாஜகவை தியாகம் செய்யுங்க மக்களே ,,//

//Samyuktha

சம்யுக்தா : அம்மா நான் ரைம்ஸ் சொல்லட்டுமா?

நான் : வேணாம் கொஞ்ச நேரம் தூங்குமா

சம்மு : இல்ல சொல்வேன்

நான் : நீ சொன்னா வரிசையா சொல்லிட்டே இருப்ப..தூங்குமா பிளீஸ்

சம்மு : போமா நீ ....யாராச்சும் வீட்டுக்கு ஆளுங்க வந்தா ரைம்ஸ் சொல்லு சொல்லுனு கேட்டுட்டே இருப்ப , இப்போ வேணாங்குற..உங்களுக்கு ரொம்ப குறும்பு அதிகமாகிடுச்சுமா...//

//Vinodhini Nila

அமாவாசை குடும்பத்தை சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் //

//மனோ பிருந்தா

இயந்திரம் நீ

டேவலப்மென்ட் நான்//

//Ghouse Basha

உள்ளாட்சி தேர்தலில் மதிமுக போட்டியிடும் - வைகோ

நம்ம அடுத்த ப்ராஜக்ட் தீபாவா தல//

//Rajini Vijay

“ஒரு நிமிடத்தில்

உன்னை கடந்து போகிற பெண்ணைப் பார்க்க

தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே..?” என்று

கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...

“நீ கூடத்தான்

ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக

ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்” என்று…//

//Sayed Buhari

யாகம் செய்து தேகம் வளர்த்தவர்கள்

தியாகம் செய் தேசம் வளர

என்கிறார்கள்//

//Chinna Paiyan

சசிகலா சுயசரிதை எழுதுறேன்னு சொன்னதுக்கே இப்படி பொலம்புறிங்களே

அத அவங்க இங்கிலீசுல தான் எழுதுராங்கனு தெரிஞ்சா என்னாகுவீங்க..//

//தீரன் விஜயவர்மன்

தமிழ் நாட்டில் காவேரி என்றொரு ஆறு பாய்ந்ததாக வரலாறு மட்டும் சொல்லும்//

//Chinna Paiyan

நாளை பேரவை கொள்கைகள் வெளியிடப்படும் - தீபா

கொஞ்சம் கேப் விடுடா பாப்பா .. கட்சி பேரு அறிவிச்சதுக்கே இன்னும் சிரிச்சு முடிக்கல..

ஒடனே கொள்கை நா எப்படி...//

-லாக் ஆஃப்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon