மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் பேரழிவுகள் ːமோடி உரை!

கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் பேரழிவுகள் ːமோடி உரை!

மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் என்று பேசிய மோடி சில நேரங்களில் பேரழிவுகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக நாட்டு மக்களுக்கு மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று 29ஆவது மான் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, " “ குளிர் காலம் விலகி வசந்த காலம் தற்போது தான் நமது வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சிக்கு முன் எனக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அம்பேத்கரை நினைவுகூறும் வகையில் பீம் செயலியில் பணபரிமாற்றம் செய்வது குறித்து ஒவ்வொருவரும் குறைந்தது 125 பேருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையைப் பயன்படுத்த வேண்டும் சில நேரங்களில் பேரழிவுகள்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றன. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளது. இதற்கு இஸ்ரோவின் உழைப்பும் காரணம்.

இளைஞர்களை அறிவியல் ஈர்க்க வேண்டும். நமக்கு இன்னும் அதிக விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். நமது சமூகமும் தொழில்நுட்பத்தை நோக்கித் திரும்புகிறது. அனைத்து அமைப்புகளும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன.

விவசாயிகளின் கடின உழைப்பால் உணவு தானிய உற்பத்தி 2,700 டன்னாக உயர்ந்துள்ளது. உலக பெண்கள் தினமாக மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாம் நமது பெண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அந்த தினத்தை அனுசரிக்க வேண்டும். கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon