மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒதுக்கீடு கேட்டு வழக்கு!

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு  ஒதுக்கீடு கேட்டு வழக்கு!

சென்னை ஐகோர்ட்டில் திருவள்ளுவர் மாவட்டம், மேலகொண்டையூரைச் சேர்ந்த சுகுமார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் படி கடந்த 1995–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் இடஒதுக்கீடு என்பது, சுழற்சி முறை இடஒதுக்கீடு விதிகளின்படி, கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பெண்கள், பொதுப்பிரிவு பெண்கள், பொதுப்பிரிவு என ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த விதிகளின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், மேலகொண்டையூர் கிராம பஞ்சாயத்தை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கவேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக மேலகொண்டையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், பொது பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுழற்சி முறைப்படி இந்த கிராமத்தை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கவேண்டும். ஆனால் இது தொடர்பாக அளித்த மனுவை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் நிராகரித்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.இந்த மனுவை ஐகோர்ட்டின் முதல் டிவி‌ஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த மனுவுக்கு மார்ச் 6–ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon