மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

எழுத்தாளர் சுஜாதாவின் குறும்பு

எழுத்தாளர் சுஜாதாவின் குறும்பு

தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட வெகு சிலரில் சுஜாதாவும் ஒருவர். சில எழுத்தாளர்களின் எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். இதற்கு உதாரணமாக வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் லா.ச.ராமாமிர்தம், கி.ராஜநாராயணன் என்று சிலரை பட்டியலிடலாம். இந்தப் பட்டியலில் நீக்கமுடியாத ஒரு பெயர் சுஜாதா.

சுஜாதாவின் ‘மனைவி கிடைத்துவிட்டாள்’ என்ற கதையில் வரும் காட்சி இது:

முதலிரவின்போது, நாயகி (வேணி)...

‘உங்களுக்குப் பிடிச்ச புத்தகம் எது?’

‘வேணி’ என பதில் கூறுகிறான் நாயகன்

‘படிங்க’ என நாயகி கூற

முதலில் அட்டைப் படத்தைப் பார்த்தான். பிரித்தான். பொருள் அடக்கத்தைத் தேடினான். முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதைகளைத் தொட்டான், வார்த்தைகள், இடைவெளிகள், இடைச்செருகல்கள்...... என வரிகள் நீள்கிறது.

இதன் பொருளை ஆங்கிலத்தில் தந்துவிட முடியும். ஆனால் சுஜாதாவின் குறும்பு..?

நாளை (பிப்ரவரி 27) சுஜாதா நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ந.வினோத் குமார் எழுதிய ‘ஆங்கிலத்தில் சுஜாதா!’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon