மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

உள்ளாட்சி தேர்தல் : பாஜக தனித்து போட்டி!

உள்ளாட்சி தேர்தல்  :  பாஜக தனித்து போட்டி!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மராட்டியம், ஓடிசா மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடக்கும் போது அந்த தேர்தலை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, மாற்று சக்தியாக தமிழக பாஜக திகழும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தேவையான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக தனித்து போட்டியிடும். தேவை ஏற்பட்டால் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும், நெடுவாசலில் வரவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பேசிய தமிழிசை, "தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் வரவிற்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அப்போது ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏன் இப்பொது தெரிவிக்கிறார். இந்தத் திட்டம் கொண்டு கொண்டு வந்தபோது, அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம்" என்றார். ஈஷா யோகா மையத்திற்கு பிரதமர் மோடி வந்தது தவறில்லை என்றும் அவர் கலந்து கொண்டதில் அனைத்து நடைமுறைகளும் முறைப்படி நடைபெற்றது என்று தெரிவித்தார். மேலும், ஈஷா யோகா மையம் அணைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டே கட்டப்பட்டுள்ளது என்றார்.

டிவிட்டர் பக்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அடிக்கடி பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அவரின் சில கருத்துகள் கட்சி நிலைபாட்டிற்கு முரணாக உள்ளது. இதனால் தமிழக பாஜக கட்சி தலைமைக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, "பாஜக தலைவர்கள் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பது என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon